அவளேயென் தோழி!
July 22, 2013
பேசாத பலநாட்களில்
பிணமாகத் தானிருந்தேன்,
மூச்சான அவள்பேச்சால்
மீண்டு(ம்) நான்பிறந்தேன்,
விலகிச் சென்றபோது
விட்டுப்போன கண்ணீர்த்துளி,
சிட்டாய் திரும்பியபோது
சிரிக்கிறது கண்ணோரம்!
புரிந்துகொள் பிரிவே
கூடிய காதலுடன் ஒருத்தி
காத்துக் கொண்டிருப்பாள்
அவளேயென் தோழி!